ஆபத்தான இடத்தில் செல்பி… ஆபத்துக்களை தவிர்க்க புதிய ஆப்

புதுடில்லி:
செல்பி எடுக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க புதிய ஆப் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்தான இடங்களில்,’செல்பி’ எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, புதிய, ‘ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டில்லி, ஐ.ஐ.டி., பேராசிரியர் பொன்னுரங்கம் குமரகுரு, இந்த செயலியை உருவாக்கி உள்ளார்.

‘சேப்டை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, ‘செல்போனில்’ பதிவிறக்கம் செய்தவர்கள், ஆபத்தான இடங்களில், ‘செல்பி’ எடுக்கும் போது, இந்த செயலி அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!