ஆப்கனில் தற்கொலை படை தாக்குதல் 3 பேர் பலி

காபூல்:
ஆப்கனில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு பக்க பலமாக நேட்டோ படையினர் உள்ளனர். ஆனால் அவர்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள பர்வான் மாகாணத்தில் சாரிக்கர் என்ற இடத்தில் நேட்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரும், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை மாகாண கவர்னர் செய்தி தொடர்பாளர் வஹிதா ‌ஷக்கார் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!