ஆப்கன் தேர்தல்… வெடிகுண்டுக்கு பலியானவர் மகனுக்கு வாய்ப்பு… வாய்ப்பு!

காபூல்:
வாய்ப்பு… வாய்ப்பு… வெடிகுண்டு சம்பவத்தில் பலியானவர் மகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தேர்லில் போட்டியிட வெடிகுண்டு சம்பவத்தில் பலியானவரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தாண்டு இறுதிக்குள் பார்லிமென்ட்டிற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சீக்கியர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் சீக்கிய தலைவர் அப்டார் சிங் கல்சா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 1-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் சீக்கியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதில் வேட்பாளர் அப்டார் சிங் கல்சாவும் ஒருவராவார். தற்போது இவரது மகன் நரிந்தர் சிங் கல்சாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு குறிப்பிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!