ஆப்கானிஸ்தான் – கண்டஹர் நகரின் பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் – கண்டஹர் நகரின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெனரல் அப்துல் ராஸிக் அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூர் உளவுப்பிரிவின் தலைவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த மாநில ஆளுநர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், மேலும் 3 அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர்.

நாளை (20) கண்டஹர் நகரில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் கண்டஹர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெனரல் அப்துல் ராஸிக் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத்தளபதி ஸ்கொட் மில்லர் ஆகியோரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போதும், அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத்தளபதி அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.

Sharing is caring!