ஆம்ஆத்மியின் மற்றொரு முகம்… கிழித்து தொங்கவிட்ட அசுதோஷ்

புதுடில்லி:
தேர்தலுக்காக ஆம்ஆத்மி என்னையும், எனது ஜாதியையும் பயன்படுத்திக் கொண்டது என்று முன்னாள் பத்திரிக்கையாளர் அசுதோஷ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அசுதோஷ் அறிவித்தார். தனிப்பட்ட காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் 2019 ம் ஆண்டு டில்லி தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட உள்ள அதிஷி மெர்லினா என்பவரிடம் அக்கட்சி தலைமை, தேர்தலில் போட்டியிட மெர்லினா என்ற பெயரை நீக்கும்படி கூறி உள்ளது.

மதத்தை குறிக்கும் பெயர் என்பதால் அதனை நீக்கும்படி கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதிஷி அதற்கு மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. இது பற்றி அசுதோசிடம் கேள்வி எழுப்பி போது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அசுதோஷ் தெரிவித்துள்ளதாவது:

எனது 23 வருட பத்திரிக்கையாளர் வாழ்க்கையில் யாரும் எனது ஜாதியின் பெயரையோ, மதத்தின் பெயரையோ கேட்டதில்லை. என் பெயரை வைத்தே என்னை அனைவருக்கும் தெரியும். ஆனால் 2014 லோக்சபா தேர்தலின் போது எனது ஜாதியின் பெயரை வைத்தே தொண்டர்களிடம் என்னை அறிமுகம் செய்தனர்.

எனது ஜாதியின் பெயரை சொல்லியே அடையாளம் காட்டினர். அதனாலேயே ஆம்ஆத்மிக்கு ஓட்டு கிடைத்து, அக்கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்காக ஆம்ஆத்மி என்னையும், எனது ஜாதியையும் பயன்படுத்திக் கொண்டது என தெரிவித்துள்ளார்.

2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வின் ஹர்ஷவர்தன் மற்றும் காங்.,ன் கபில்சிபிலை எதிர்த்து சாந்தினி சவுக் பகுதியில் போட்டியிட்ட அசுதோஷ் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஆத்மி கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலர் விலகி வரும் நிலையில் அக்கட்சியின் மீது தற்போது அசுதோஷ் குற்றம்சாட்டி இருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!