ஆயுஷ்மான் திட்டத்தில் 2 லட்சம் பேர் பயன்

புதுடில்லி:
ஆயுஷ்மான் திட்டத்தில் 2 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் சுகாதார பாதுகாப்பு ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் 2. 3 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதில் குஜராத், தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் டாப் 5 பட்டியலில் உள்ளன.

மோடி கேர்’ எனப்படும் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை கடந்த ஆக.,15ல் பிரதமர் மோடி அறிவித்தார். 10 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையில், மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும்.

இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். இந்த திட்டம் கடந்த செம்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தில் இது வரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 592 பேர் பயன் பெற்றுள்ளனர். ம் பொது அறுவை சிகிச்சை மற்றும் வயிறு தொடர்பான சிகிச்சை, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் 58 சதவீதத்தினரும், பெண்கள் 42 சதவீதத்தினரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் 68 சதவீத்ததினரும், பொது மருத்துவமனையில் 32 சதவீதத்தினரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பெரும் நோயினால் பாதிக்கப்படும் ஏழைகள் மருத்துவ செலவிற்கு தவிக்கும் போது இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும், இது தொடர்பான விண்ணப்பங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றன. தினமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை இந்த உதவி பெற வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளதாக துணை தலைமை அதிகாரி தினேஷ் அரோரா தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!