ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 6 பேர் பலி

நேபாள நாட்டின் பேடாடர் மலையில் கோஷி பகுதி வழியாக இந்திய வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீசார் மீட்டு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும், மருத்துவமனையில் சேர்கப்பட்ட 3 பேரும் என மொத்தம் 7 வயது சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Sharing is caring!