ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 20 பேர் பலி
சுவிட்சர்லாந்து:
ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதியதால் 20 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2-ம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள் சிக்கிய ஜேயு52 எச்பி-எஓடி என்ற சிறிய ரக விமானம் கடந்த 1939-ம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. டிசினோ நகரில் இருந்து, டியுபென்டார்ப் ராணுவ விமானத் தளத்துக்கு புறப்பட்டு சென்ற போது, ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான பிஸ் செக்னாஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S