ஆஸ்பத்திரியில் எலி கடித்து இறந்ததா குழந்தை… விசாரிக்க குழு அமைப்பு

தர்பங்கா:
பிறந்து எட்டுநாள் ஆன குழந்தை எலி கடித்துதான் இறந்ததாக எழுந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.

பிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் பிறந்து எட்டுநாள் ஆன குழந்தை எலி கடித்து இறந்ததாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மதுபானி மாவட்டம் நஜ்ரா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு தர்பங்கா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தாய் பாலுாட்ட சென்றபோது குழந்தை இறந்தது தெரிந்தது.

குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருந்தது. மருத்துவமனையில் எலி கடித்ததால் காயம் ஏற்பட்டு, குழந்தை இறந்ததாக பெண் குற்றம் சாட்டினார். இதை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு பொறுப்பு அதிகாரி ஓம் பிரகாஷ் மறுத்தார்.

துணைகமிஷனர் கரி பிரசாத் மெகாத்தே வீட்டு முன் பெற்றோர் போராட்டம் நடத்தினர். மாவட்ட நீதிபதி சந்திரசேகர் பிரசாத் மூன்றுநபர் குழு அமைத்து அறிக்கை கேட்டுள்ளார். இந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!