இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்

சென்னை:
உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அனேக இட்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ., பரமக்குடி, இரணியல், விளாத்திகுளம் பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், மதுரை, கரூர், தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, கொடைக்கானல் உட்பட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!