இடைத்தரகர் குடும்பம்… காங்கிரஸ் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பாஜ

புதுடில்லி:
இடைத்தரகர் குடும்பம்… இடைத்தரகர் குடும்பம் என்று பாஜ குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக ரபேல் விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என பா,ஜ. குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித்பத்ரா தெரிவித்துள்ளதாவது:

ராணுவ ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியலில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை பரப்புகிறார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது ராணுவ ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக காங். இருந்தது. இதன் மூலம் ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!