இடைத் தரகர் மைக்கேல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த காங்., தலைவர் ராகுல்
ஜெய்ப்பூர்:
கிறிஸ்டியன் மைக்கேல் குறித்த கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் எவ்வித பதிலும் அளிக்காமல் சென்றார்.
விவிஐபிக்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல். இவர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதன் மூலம், ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் உண்மை வெளிவரத்துவங்கும் எனக் கூறினார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுலும் நிருபர்களை சந்தித்தார். அப்போது கிறிஸ்டியன் மைக்கேல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி