இணையம் மூலம் சர்வரை முடக்கி வங்கியிலிருந்து ரூ.143 கோடி கொள்ளை

மும்பை:
மும்பையில் இணையம் மூலம் வங்கி சர்வரை முடக்கி ரூ.143 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, ‘ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்’ வங்கி பிரதான, ‘சர்வரை’ முடக்கி, 143 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் நாட்டு வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து ‘ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்’ என்ற பெயரில் இயங்குகிறது.

மும்பையில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ் வங்கிகிளையில், இணையம் மூலம், 143 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, மும்பை பொருளாதார குற்றப் பிரிவில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!