இது இறுதியல்ல… உறுதி சொன்ன மத்திய அமைச்சர்

புதுடில்லி:
இது இறுதியல்ல… இறுதியல்ல… என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் இறுதியானது அல்ல என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் கூறினார்.

அசாமில் எடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் 40 லட்சம் பேர் இடம்பெறாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல், சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நடந்தது. தற்போது வெளியிடப்பட்டது இறுதியான வரைவு அல்ல. மேல்முறையீடு செய்ய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் தயாரிக்கும் பணி நேர்மையான முறையில் நடந்தது.

தேவையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது. தற்போதைய சூழ்நிலையில், யார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். அச்சப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!