இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை வரும் 25ம் தேதி திறப்பு

திப்ருகார்:
மிகவும் நீளமான ரயில்பாதை வரும் 25ம் தேதி திறக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகவும் நீளமான ரயில் பாலத்தை டிச.25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

வடகிழக்கு மாநிலங்களன அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து ரயில் பாலம் கட்டும் பணி போகிபீல் என்ற இடத்தில் நடந்து வருகிறது.

4.94 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். 1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் நிறைவடைந்தன.

வரும் 25-ம் தேதி இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!