இந்தியாவின் 20 ஆண்டு முயற்சிக்கு வெற்றி

நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

கடந்த 11 மற்றும் 12-ம் திகதிளில் ஐ.என்.எஸ்., அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்தது.

கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழத்திலிருந்து இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.

10 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 750 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றி பெற்றதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளின் 20 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

இந்த சோதனையை இந்தியா மிகவும் ரகசியமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!