இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது

2010ம் ஆண்டை விட 2017ம் ஆண்டில் இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘2010 முதல் 2017ம் ஆண்டு வரை எய்ட்ஸ் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியாட்நாம் நாடுகளில் எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் மரணங்கள் குறைந்துள்ளது.

பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2010ம் ஆண்டில் இந்தியாவில் 1.20 லட்சத்தில் இருந்து 88 ஆயிரமாக குறைந்துள்ளது. எய்ட்ஸ் மரணமும் 1.60 லட்சத்தில் இருந்து 90 ஆயிரமாக குறைந்துள்ளது. எச்ஐவி பாதிப்புடன் வாழுபவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தில் இருந்து 21 லட்சமாக குறைந்துள்ளது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!