இந்தியாவை பின்பற்றும் பாகிஸ்தான்… தூய்மை, பசுமை பாக்., திட்டம் அறிவிப்பு

இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் தூய்மை திட்டம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்:
இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் தூய்மை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தை போன்று பாக்.கிலும் தூய்மை திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் துவக்கி வைத்தார்.

நமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் துாய்மையானதாக மாற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது , ‘சுவச் பாரத்’ எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகள் துாய்மை அடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பக்கத்து நாடான பாகிஸ்தான் அரசும் தூய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தூய்மை மற்றும் பசுமை பாகிஸ்தான் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்ள இம்ரான் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் மாலிக் ஆமின் அஸ்லாம் கான் தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!