இந்தியா அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்

அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக தொடர்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் விஜய் கொகலே தெரிவித்துள்ளார்.

4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெய் கொள்வனவை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமென அமெரிக்கா , சர்வதேசத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

Sharing is caring!