இந்தியா மற்றும் எ​செக்ஸ் அணிகளுக்கிடையேயான பயிற்சி சமமாக முடிவடைந்தது

இந்தியா மற்றும் எ​செக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் மற்றும் இந்தியா அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி 395 ஓட்டங்களையும், எசெக்ஸ் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 359 ஒட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து பயிற்சி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

Sharing is caring!