இந்தியா மீது கருணை கொண்ட பாகிஸ்தான்

100 இந்திய மீனவர்களை பாக்கிஸ்தான் அரசாங்கம் விடுவித்து மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

நல்லெண்ண அடிப்படையிலும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகவும் , சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 100 இந்திய கைதிகளை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதுடன் அவர்களை லாகூருக்கு அனுப்பி வைத்ததாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இந்த மீனவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் 7 ம் திகதி, ஏற்கனவே பாக்கிஸ்தான் நூறு மீனவர்களை விடுவித்த நிலையிலேயே இவ்வாறு மீண்டும் மீனவர்கள் விடுதலை இடமம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாகிஸ்தான் இந்தியா இடையில் பனிப்போர் போன்ற சூழல் நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது.

Sharing is caring!