இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது

மனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆலோசகராக இருப்பவர் மினால் படேல் டேவிஸ். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆட்கள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இதைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்த விழாவில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் மினால் படேலுக்கு அதிபர் விருது வழங்கப்பட்டது.

Sharing is caring!