இந்திய எல்லையில் பறக்கும் விமானத்தில் விரைவில் வைபை வசதி

புதுடில்லி:
வைபை வசதி… விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்கு தெரியுங்களா?

இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் வைபை வசதி துவக்கங்கப்பட உள்ளது. நீண்ட நாட்களாக பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்த இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த தகவலை விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவ்பே வெளியிட்டுள்ளார். ஏர்டெல் ஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரே லுப்ட்ஹன்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கதார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களில் இந்த வசதி இருந்தாலும் அந்த விமானங்களுக்கு இந்திய விமான எல்லையில் வைபை வசதி கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!