இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் தென் ஆப்ரிக்க அதிபர்

புதுடில்லி:
பங்கேற்கிறார்… சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்க உள்ளார். ஜனவரி, 26ல் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு, வெளிநாட்டு தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவர்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 10 தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு (2019) குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், டிரம்ப் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், அர்ஜென்டினாவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா வை சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதை தென்ஆப்ரிக்க அதிபரும் ஏற்று கொண்டார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடக்கும் நிலையில், 2019 குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக வரும் அதிபர் ராமபோசாவை வரவேற்பதில் பெருமை அடைகிறோம். காந்திக்கும், தென் ஆப்ரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதிபரின் வருகையும், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவு வலுப்பெறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!