இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை

இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மண்ணெண்ணெயின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக, சட்டவிரோதமாக பஸ் மற்றும் லொறிகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மண்ணெண்ணெயின் விலை குறைவடைந்ததையடுத்து, நாளாந்த மண்ணெண்ணெயின் பாவனை 650 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 12 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 70 ரூபாவாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!