இந்திய மீனவர்கள் எட்டு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் புத்தள மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கற்பிட்டி குதிரமலை கடற்பரப்பில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இரவு இந்திய மீனவர்கள் எட்டு பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!