இந்திய ரூபாய் மதிப்பு சரிவு… சரிவு…!

மும்பை:
சரிவு… சரிவு… இந்திய ரூபாயின் மதிப்பு 3வது நாளாக சரிவடைந்துள்ளது.

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 3வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 69.12 ஆக உள்ளது. வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 69.05 ஆக இருந்தது. இதற்கு முன் ஜூன் 28 ம் தேதி ரூபாய் மதிப்பு 69.10 ஐ எட்டியதே உச்சபட்ச வீழ்ச்சியாக கருதப்பட்டது.

இந்நிலையில் இதனை முறியடிக்கும் வகையில் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து 69.12 என்ற நிலையை எட்டி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!