இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை உயர்வு… உயர்வு…!

புதுடில்லி:
இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளை பேசுபவர்கள் குறித்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 2001 ம் ஆண்டு 41.03 சதவீதமாக இருந்த இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 2011 ல் 43.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. மிக அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் இந்தியை தொடர்ந்து வங்காளம் 2 வது இடத்திலும், மராத்தி 3வது இடத்திலும் உள்ளது.

தெலுங்கு 4வது இடத்திலும், தமிழ் 5வது (5.89%) இடத்திலும் உள்ளன. மிக குறைவானவர்களால் பேசப்படும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. 24,821 பேர் மட்டுமே போடோ, மணிப்பூரி, கொங்கணி, தோக்ரி போன்ற மொழிகளை பேசுகிறார்கள்.

அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளில் அதிகபட்சமாக 2.6 லட்சம் பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன.

அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் உருது 6 வது இடத்திலும், குஜராத்தி 7வது இடத்திலும் உள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் 96.71 சதவீதம் பேர் அட்டவணைபடுத்தப்பட்ட 22 மொழிகளில் ஒன்றை தங்களின் தாய்மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். 3.29 சதவீதம் பேர் மட்டுமே பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!