“இந்து மக்களின் உணர்வை காயப்படுத்துவது போல் உள்ளது”

புதுடில்லி:
இந்து மக்களின் உணர்வை காயப்படுத்துவது போல் உள்ளது என்று ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குவதில் காலம் தாழ்த்துவது நல்லதல்ல. இது இந்து மக்களின் உணர்வை காயப்படுத்துவது ஆகும் என ஆர்.எஸ்.எஸ்., செயலரான சுரேஷ் ஜோஷி கூறியுள்ளார்.

ராமர்கோயில் கட்டுவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 6 வருடங்களில் ஆர்எஸ்எஸ் அபரிமித வளர்ச்சி அடைந்துள்ளது. 61 ஆயிரம் கிராமங்களை தேர்வு செய்து அதன் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறோம். நாட்டின் முன்னேற்றமே எங்களின் இலக்கு. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சில சட்டசிக்கல்கள் உள்ளது. இந்து மக்கள் இங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்புகின்றனர். இந்துக்களின் உணர்வுக்கு சுப்ரீம் கோர்ட் மதிப்பளிக்க வேண்டும். அயோத்தி விவகாரத்தில் விரைவான தீர்ப்பு வேண்டும். தீர்ப்பில் காலம் தாழ்த்துவது இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதற்கு சமம்.

தீபாவளியை ஒட்டி ஏதேனும் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!