இனிப்புகளிற்குப் பதிலாக செத்த எலி

டிசம்பர் முதலாம் திகதி நத்தார் தினம் வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திகதிக்குமான பெட்டிகளைத் திற்கும் பொழுதும் சொக்லேட்கள் அல்லது சிறு விளையாட்டுப் பொருட்கள் இருப்பதே நத்தார் நாட்காட்டியான Calendrier de l’Avent (Advent calender) ஆகும்.

இப்படியான ஒரு நாட்காட்டியின் 14வது நாளைத் திறந்த ஒரு இரண்டு வயதுச் சிறுமிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

Causses-et-Veyran (Hérault)  நகரில், ஒரு தாய் தன் இரண்டு  வயது மகளுடன், இந்த நத்தார் நாட்காட்டியின் 14ம் நாளைத் திறந்தபொழுது, அதற்குள் இருக்க வேண்டிய இனிப்புகளிற்குப் பதிலாக, உள்ளே ஒரு செத்த எலி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sharing is caring!