இனி இப்படிதான்… இதுதான் புதிய நடைமுறை… எஸ்பிஐ அதிரடி

புதுடில்லி:
இனி இதுதான்… இதுதான்… புதிய நடைமுறை என்று இன்று முதல் எஸ்பிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை இன்று (31-ம் தேதி) முதல் அமலாகிறது.

ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து வங்கி வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!