இனி ஜெய்ஹிந்த்… ஜெய் பாரத்… கூற உத்தரவு… உத்தரவு!!!

ஆமதாபாத்:
மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த்… ஜெய் பாரத் என்று கூற உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பள்ளிகளில் மாணவர்கள் ‘யெஸ் சார்’, ‘பிரசன்ட் சார்’ என்பதற்கு பதில், ‘ஜெய்ஹிந்த்’, ‘ ஜெய் பாரத்’ என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆரம்ப கல்வித்துறை, மேல்நிலை, உயர்நிலைத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: குஜராத் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வருகைப்பதிவேடு எடுக்கும்போது, ‘ஜெய்ஹிந்த்’, ‘ ஜெய் பாரத்’ என சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து தேசப்பற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக முதல் அமலுக்கு வருகிறது. இதே போன்ற உத்தரவை மகாராஷ்டிரா அரசும் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!