இன்று அர்ஜென்டினா பறக்கிறார் பிரதமர் மோடி… ஜி.20 மாநாட்டிற்காக
புதுடில்லி:
இன்று அர்ஜென்டினா பறக்கிறார் பிரதமர் மோடி என்று டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (28ம் தேதி) அர்ஜென்டினா புறப்பட்டு செல்கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-20’ மாநாடு அர்ஜென்டினாவில் நடைபெறுகிறது.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் 13வது ஜி-20 மாநாடு வரும் 30ம் தேதி முதல் டிச.,1 வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா புறப்பட்டு செல்கிறார். மாநாடு முடிந்து டிச.,2ம் தேதி மோடி நாடு திரும்ப உள்ளார். அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி– பத்மா மகன், திருச்சி