இன்று உ.பி.யின் பிரசாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

லக்னோ:
பிரசாரம்… பிரசாரம் இன்று உ.பி.யில் பிரதமர் மோடி தனது பிரசார பயணத்தை தொடங்குகிறார்.

2019- லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இன்று உ.பி.யி்ல் பிரதமர் மோடி தனது பிரசார பயணத்தை மேற்கொள்கிறார். நாடு 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது.

இதற்காக பா.ஜ. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.

அதேபோல் இன்று முதல் கட்டமாக வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற உள்ள கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்கிறார். இத்தகவலை பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!