இன்று சாமியார் ராம்பால் மீதான வழக்கில் தீர்ப்பு… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஹிசார்:
சர்ச்சை சாமியார் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரியானாவில் சர்ச்சை சாமியார் ராம்பால் மீதான கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. அரியானா மாநிலம், ஹிசாரில் ஆசிரமம் அமைத்து வந்தவர் சாமியார் ராம்பால் மகாராஜ். 2014ல் நடந்த கலவரம் ஒன்றில் உள்ளூர் மக்கள் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால், கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. போலீசார் கைது செய்ய சென்ற போது, அவரது ஆதரவாளர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்தனர். கடந்த, 2006ல் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தனது ஆதரவாளர்களுக்கு சாமியார் ராமபால் உத்தரவிட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமியார் மீதான வழக்குகளின் தீர்ப்பு ஹிசார் கோர்ட்டில் இன்று வெளியாகிறது. இதையொட்டி சாமியாரின் ஆதரவாளர்களால் அசம்பாதவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க அரியானா மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பஸ் மற்றும் ரயில் சேவைகளும் நேற்று இரவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!