இன்று சில மணி நேரம் முன்பதிவு கட்… கட்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மும்பை:
இன்று சில மணிநேரம் மட்டும் முன்பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இணையதளம் பராமரிப்பு காரணமாக, மும்பை வழித்தட ரயில்களில், இன்று (27ம் தேதி) சில மணி நேரம், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்ய இயலாது’ என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையை, ‘டிஜிட்டல்’ மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐ.ஆர்.சி.டி.சி.,எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக www.irctc.co.in இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இணையதளம் பராமரிக்கப்படும் சமயத்தில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்வது நிறுத்தப்படுவது வழக்கம்.இன்று நள்ளிரவு முதல் காலை, 4:15 மணி வரை இணையதளம் பராமரிக்கப்படுகிறது.
இந்த சமயத்தில், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மும்பை சந்திப்புக்கு செல்லும் வழித்தட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய இயலாது என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!