இன்று… திருச்சியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி:
இன்று… திருச்சியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அங்கு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் இன்று திருச்சியில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்றது. இதில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சியில் அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!