இன்று பதவியேற்பு… திருநங்கை நீதிபதியாக பதவியேற்பு

கவுகாத்தி:
இன்று பதவியேற்பு… திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

மகாராஷ்டிரா, மே.வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
என்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது என்னுடைய சமுதாயத்திற்கு மிகவும் சாதகமான விஷயமாகும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 20170-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தமிழத்திலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்ய்ஸ்ரீ சர்மிளா என்பவர் கடந்த மாதம் 30-ம் தேதி இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!