இன்று மதியம் காக்கிநாடாவில் கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்

சென்னை:
ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் இன்று மதியம் கரையை கடக்கிறது பெய்ட்டி புயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெய்ட்டி’ புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்க கடலில் உருவான ‘பெய்ட்டி’ புயல் இன்று காலை சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும். ஆந்திராவில் நுழைந்ததும் வலுவிழக்கும். அதன்பின் ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.

நாளை முதல் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். டிச., 22 வரை பகலில் வெயில், இரவில் குளிர் இருக்கும். சில இடங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!