இன்று மிதமான மழை பெய்யும்… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:
மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், இன்று பரவலாக மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது:

கன்னியாகுமரி முதல் தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து, கன்னியாகுமரிக்கும், வடக்கு கேரளாவுக்கும் இடையே, நிலை கொண்டுள்ளது.

அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும். இந்திய பெருங்கடலின், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

எனவே மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட, தென் மேற்கு வங்க கடல் பகுதிக்குள், நாளை வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!