இன்று முதல் திருப்பதியில் பிரமோற்சவம் விழா தொடக்கம்

திருப்பதி:
பிரமோற்சவம்… இன்று முதல் திருப்பதியில் பிரமோற்சவம் விழா தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (12ம் தேதி) பிரமோற்சவம் துவங்க உள்ளதாக கோயில் செயல்அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கவுள்ள பிரமோற்சவத்தில் பங்கேற்று அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.

பிரமோற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பிரமோற்சவத்தை முன்னிட்டு அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட் பக்தர்கள் வருகைக்கேற்ப குறைந்த அளவில் வழங்கப்படும். திருமலைக்கு வருவதற்கான இரண்டு மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!