இன்று முதல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை
சென்னை:
24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதே பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும்.பின்னர் படிப்படியாக, உள்மாவட்டங்கள், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், மகாபலிபுரத்தில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி