இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை:
இன்று முதல் 24ம் தேதி வரை கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் மழையை எதிர்பார்த்து ஏமாறும் நிலை உள்ளது.

இந்நிலையில், இன்று முதல், 24ம் தேதி வரை, கடலோர பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!