இன்று விசாரணை நடக்க உள்ளது… அயோத்தி விவகாரம் குறித்து

புதுடில்லி:
நடக்க உள்ளது… இன்று விசாரணை நடக்க உள்ளது… அயோத்தி விவகாரம் குறித்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடக்க உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை, இரு ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள், மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட், 2010ல் தீர்ப்பு அளித்தது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை செய்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என தீர்ப்பு அளித்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!