இமயமலைப் பகுதியில் பெய்த கடுமையான பனிமழை காரணமாக மலையேறிகள் 9 பேர் பலி

நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள இமயமலைப் பகுதியில் பெய்த கடுமையான பனிமழை காரணமாக அமைக்கப்பட்டிருந்த முகாம் அழிந்ததில் அதிலிருந்த மலையேறிகள் 9 பேர் பலியாகியுள்ளனர்.

பனிப்புயல் தாக்கும்போது குறித்த முகாமில், தென் கொரியாவைச் சேர்ந்த ஐவரும் நேபாளத்தைச் சேர்ந்த நால்வரும் இருந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் ஹெலிகொப்டரின் மூலம் தேடுதலில் ஈடுபட்ட குழு, சிதைவுகளிலிருந்து 8 சடலங்கள் காணப்படுவதை உறுதி செய்தபோதும், சீரற்ற வானிலை காரணமாக அங்கு தங்கியிருக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது.

ஒன்பதாவது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

Sharing is caring!