இமயமலை சிகரங்களுக்கு அடல்பிகாரி வாஜ்பாய் பெயர்

உத்திரகாசி:
வாஜ்பாய் பெயர்… வாஜ்பாய் பெயர் வைத்து இருக்காங்க… எதற்கு தெரியுங்களா?

கங்கோத்ரி அருகே 4 இமயமலை சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கங்கோத்ரி பனிபாறையின் அருகே 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர்களில் அமைந்துள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் 1,2,3 மற்றும் 4 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமீபத்தில் இந்த சிகரங்களில் ஏறி, அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்த மலைஏறும் குழுவின் தலைவரும் நேரு இன்ஸ்டிட்யூட் ஆப் மவுன்டைனியரிங் முதல்வருமான கலோனல் அமித் பிஷ்த் தெரிவித்துள்ளார்.

இந்த மலைஏற்ற பயணம் கடந்த 4ம் தேதி அன்று முதல்வர் திரிவேதி சிங் ராவத் கொடியசைத்து துவக்கி வைக்க, டேராடூனில் இருந்து துவங்கியது. நேரு இன்ஸ்டிட்யூட் ஆப் மவுன்டைனியரிங் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து இந்த மலையேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!