இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று நேர்ந்த இந்த விபத்தில் ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்டோரே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு ஹெலிகொப்டர்கள் பயணிகளுடன் ஹெராட் மாநிலத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவற்றில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததாக ஃபாரா (Farah) மாநில ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ள போதிலும், தமது போராளிகளால் குறித்த ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

Sharing is caring!