இறக்கை கட்டி பறக்கும் மருத்துவ செலவு… மக்கள் வேதனை

புதுடில்லி:
கவலையாக இருக்கு…. மருத்துவ செலவுகள் இவ்வளவு ஆகிறதே என்று கவலையாக இருக்கு என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு குறித்து இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து Ipsos என்ற தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் 16 முதல் 64 வயதுடைய ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவில் அதிக மருத்துவ செலவுகள் குறித்து 44 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை மோசமாக உள்ளதாக 35 சதவீதம் பேர் கவலையும், மருத்துவமனைகளில் அசுத்தம் குறித்து 30 சதவீதம் பேர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறையும் என 60 சதவீதம் பேரும், தரமான சிகிச்சை கிடைக்கும் என 69 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் நிர்வாகி மோனிகா கூறுகையில், அனைவருக்கும், குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்க செய்வதை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதன் மூலம் சில நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!