இலக்கை தொட்டது… ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது

புதுடில்லி:
கடந்து விட்டது… கடந்து விட்டது… ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்து விட்டது.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
2018 ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. குறைந்த வட்டி, குறைந்த வரி ஏய்ப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியன ஜிஎஸ்டி வெற்றி. ஒரே ஒரு வரி மட்டுமே. இடைத்தரகர்களின் தலையீடு புறந்தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படி நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.94,016 கோடியாக இருந்தது.

ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது. இப்போது ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டி விட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!