இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுமா?

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லையென, அறிவிக்கப்பட்டுள்ளது.

 வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை 7.2 நிலநடுக்கம் ரிச்ட்டர் அளவில் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக , அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கடியில் 59 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.  இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்துள்ளதாகவும் சேதவிபரங்கள் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Sharing is caring!